அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியஅ.தி.மு.க., சார்பில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கோவிலுாரில் உள்ள அவரது சிலைக்கு செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், உமேஷ்சந்தர், சுந்தர் பங்கேற்றனர்.திருப்பரங்குன்றம்-: மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள சிலைக்கு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஓம் சந்திரன், நிர்வாகிகள் மோகன்தாஸ், பாண்டுரங்கன், மகாராஜன் கலந்து கொண்டனர்.உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர் செயலாளர் பூமாராஜா, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாநில ஜெ. பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜன், கட்சியினர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க., சார்பில் மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன், நகர் செயலாளர் குணசேகரன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா மற்றும் நிர்வாகிகள் அய்யர் என்ற ராமகிருஷ்ணன், வீரபிரபாகரன், பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரையூர்: குன்னத்துார் அம்மா கோயிலில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வாங்கினார். டி.கல்லுப்பட்டி ஒன்றிய சேர்மன் சண்முகப்பிரியா, நிர்வாகிகள் பாவடியான், பாஸ்கரன் கலந்து கொண்டனர்.உலகத் தமிழ்ச்சங்கம்: மதுரையில் 1981ல் நடந்த 5வது உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என எம்.ஜி.ஆர்., அறிவித்தார். பின் 1986ல் அவரால் தொடங்கப்பட்டது.
அதன் நினைவாகவும், அவரது பிறந்தநாளை முன்னிட்டும் சங்க வளாகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சங்க வளாகத்தில் உள்ள அவரதுசிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. வெற்றித்தமிழர் பேரவை அமைப்பினர் பங்கேற்றனர்.
மதுரை கே.கே.நகர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் நிர்வாகிகள் மாலையணிவித்தனர். எல்லீஸ்நகர், நரிமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டன.* கீழ வெளி வீதியிலுள்ள சிலைக்கு அ.தி.மு.க., ஜெ., பேரவை நகர் மாவட்டம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் தலைமையில்நிர்வாகிகள் மாலைஅணிவித்தனர்.