ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தை இணைக்கும் கேந்திரமாக பாம்பன் பாலம் உள்ளது. பாலம் வழியாக செல்லும்காவிரி குடிநீர் குழாய் மூலம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன் பாலத்தில் உள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணானது. பாலத்தில் பல இடங்களில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதால் ராமேஸ்வரம் பகுதிக்கு குடிநீர் முறையாக சப்ளை செய்ய முடியவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.