மதுரை : மதுரை மேலக்கால் தானம் கல்வி நிலையத்தில் அதன் இயக்குனர் குருநாதன் தலைமையில் திருவள்ளுவர் தினவிழா நடந்தது.
கொடிமங்கலம், திருவேடகம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 112 மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, ஓவியம், பேச்சு, கோலப் போட்டியில் பங்கேற்றனர்.மங்கையர்க்கரசி கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, பேராசிரியர் அனிதா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். துணை இயக்குனர் பிரேமானந்த், நிர்வாகிகள் பிரவீன்குமார், கணேசன், ஹேமநாதன் ஒருங்கிணைத்தனர். சசிகலா நன்றி கூறினார்.