அருப்புக்கோட்டை : பயன்பாட்டிற்கு வராத குளியல் அறை, காட்சி பொருளான இ- சேவை மையம் என, ரூ. லட்சக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட கட்டடங்கள் பயனற்று கிடப்பதாக பெரியநாயகிபுரம் ஊராட்சி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஊராட்சிக்குட்பட்ட வாழ்வாங்கியில் 7 மாதங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.. நிதியில் ரூ. 5 லட்சம் செலவில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. சாக்கடை ஓரத்தில் மேலேயே பதித்ததால் பல பகுதிகளில் குழாய்கள் நசுங்கி விட்டன. இன்னும் சில பகுதிகளில் குழாய்கள் இணைக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. பணியும் நிறுத்தப்பட்டு விட்டது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் அரசு நிதி வீணடிக்கப்பட்டதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.வாழ்வாங்கியில் கட்டப்பட்ட குளியல் அறை பயன்படாமல் உள்ளது. மயானத்திற்கு செல்லும் ரோடு மோசமாக உள்ளது. ஆதி திராவிடர் பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் வழியில் பாலம் அமைக்க வேண்டும். தெருக்களில் சாக்கடைகளும் சேதமடைந்துள்ளன. அடிப்பகுதி சீராக இல்லாததால் கழிவு நீர் தேங்குகிறது.
பல தெருக்களில் ரோடே இல்லை. இங்கு கொசு தொல்லை அதிகமாக உள்ளது.செயல்படாத இ--சேவை மையம்போத்திராஜ், விவசாயி: இ-சேவை மையம் ரூ. பல லட்சத்தில் கட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ளது. மையம் செயல்பட்டால் கிராம மக்கள் பல்வேறு விதமான சான்றிதழ்களை பெற வசதியாக இருக்கும். பி.டி.ஓ. ,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்படாத கழிப்பறைபழனிச்சாமி, விவசாயி: பெண்களுக்கு என கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் குளியல் அறையும் பயன்படாமல் உள்ளது.கழிவு நீர் தேக்கம்சுப்பையா, விவசாயி: ஊரில் பிரதான சாக்கடை சீராக இல்லை. கழிவு நீர் ஆங்காங்கு தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது.மெயின் சாக்கடையின் அடிப்பகுதியை சீராக அமைக்க வேண்டும். பணிகள் செய்யப்படும்இளங்கோ, ஊராட்சி தலைவர், பெரியநாயகிபுரம் : துவக்கப் பள்ளி அருகிலிருந்து பிள்ளையார் கோயில் வரை ரோடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதியில் நிறுத்தப்பட்ட குடிநீர் குழாய் பணி துவங்கப்படும். நிதி நிலைமைக்கேற்ப வளர்ச்சி பணிகள் செய்யப்படும்.சாக்கடைவசதி இல்லைபாண்டிச்செல்வி, கவுன்சிலர் : ஒன்றிய நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் சாக்கடை அமைக்கப்பட உள்ளது. பெரியநாயகிபுரத்தில் பேவர் பிளாக், சாக்கடை அமைக்கப்படும்.வசதிகளுக்கு முன்னுரிமைசசிகலா பொன்ராஜ், ஒன்றிய தலைவர்: நிதி நிலைமைக்கு ஏற்ப ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செய்யப்படும். குடிநீர் குழாய் பணிகள் மீண்டும் முழு வீச்சில் துவங்கி முடிக்கப்படும், என்றார்.---