சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் ஆறுகள் ,கண்மாய்கள் ,ஊரணிகள் போன்றவற்றை குப்பை கிடங்காக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் அபாயம் உள்ளது.
ஆறுகள் ,கண்மாய்கள் ,ஊரணிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகள் ,பறவைகளுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. விருதுநகர் கவுசிகா நதி ,சாத்துார் வைப்பாறு ,அர்ச்சுனா நதி, உப்போடை நதி, ஊரணிகள் கண்மாய்களில் இரவு நேரங்களில் ஆலைகளிலிருந்து கொண்டுவரப்படும் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர் .இதனால் நீர்நிலைகள் பரப்பளவு குறைவதுடன் தேங்கும் தண்ணீரும் மாசு அடைகிறது .
இயற்கையாக ஆறு, குளங்களில் காணப்படும் மீன், நண்டு, ஆமை போன்ற உயிரிவைகள் தண்ணீர் மாசு அடைவதால் இறக்கும் நிலை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் , தீப்பெட்டி ஆலை கழிவுகள், பட்டாசு ஆலை , கழிவுகள், மதுபாட்டில்கள், காலவதியான மருந்துகளையும் கொட்டுகின்றனர். சிலர் கட்டடகழிவுகளையும் போடுகின்றனர். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது நீரோட்டம் தடுக்கபட்டு சுற்று குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளது.ஒவ்வொரு கழிவுகளையும் எந்த முறையில் அகற்ற வேண்டும் என்ற விதிமுறைகளை ஆலைகள் சரியாக பின்பற்றுகின்றனவா என்பதை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதுடன் , குடியிருப்பு கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நீர்நிலைகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதோடு அவற்றை முறையாக பராமரித்து தூய்மையாக வைத்துக் கொள்ள தேவையான விழிப்புணர்வு களையும் ஏற்படுத்திட ,மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்............. மக்கள் ஒத்தழைப்பும் தேவைவைப்பாறு, அர்ச்சுனா நதி, கவுசிகா நதிகளில் அதிக அளவில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த நதிகள் மாசு அடைந்து தற்போது சாக்கடை ஓடும் நதியாக மாறி விட்டது .இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர் .இதனால் உள்ளாட்சி நிர்வாகத்தால் தடுக்க முடியாத நிலை உள்ளது. நீர்நிலைகள் அருகில் வசிக்கும் பொதுமக்கள் இதனை கண்காணித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் மட்டுமே தடுக்கமுடியும். உள்ளாட்சி நிர்வாகமும் நீர்நிலைகளை மாசுபடுத்த கூடாது என எச்சரிக்கை பலகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்காளிராஜன், தனியார் நிறுவன ஊழியர்...................