வேலி ஏற்படுத்த வேண்டும்
ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி சங்கரலிங்கபுரத்தில் பாழடைந்து மூடப்படாத கிணறு தரைமட்டத்துடன் உள்ளது. இங்கு வேலி ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும்அம்பிராஜன், சங்கலிங்காபுரம்.நடவடிக்கை எடுக்கப்படும்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
முத்துலெட்சுமி, ஊராட்சி தலைவர்,
நல்லமநாயக்கன்பட்டிகண்மாய் துார்வார வேண்டும்
வெம்பக்கோட்டை கண்மாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை .பலத்த மழை பெய்தும் குறைந்தளவு தண்ணீரே தேங்கி உள்ளது.காளிராஜ், வெம்பக்கோட்டை.நடவடிக்கை எடுக்கப்படும்கண்மாய் துார்வாரும் பணிகள் விரைவில் செய்யப்படும். இப்பணி தொடர்பாக ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பஞ்சவர்ணம் கணேசன், ஒன்றியக்குழு தலைவர்,
வெம்பக்கோட்டை.ரோடு வசதி இல்லை
விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனியில் ரோடு வசதி இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.சங்கர், விருதுநகர்.நடவடிக்கை எடுக்கப்படும்நிதி வந்ததும் ரோடு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். மருதுராஜ், ஊராட்சி தலைவர், சத்திரரெட்டியபட்டி.
நாய் தொல்லை தாங்கல
விருதுநகர் வேலுச்சாமி நகரில் நாய்த்தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் நடமாட முடிவதில்லை.கந்தசாமி, விருதுநகர்.விரைவில் நடவடிக்கைநாய்களை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.சையது முஸ்தபா கமால், நகராட்சி கமிஷனர், விருதுநகர்.சுகாதாரக்கேடுசிவகாசி பள்ளப்பட்டி ஊராட்சி முத்துராமலிங்கம் காலனியில் சாக்கடை துார்வாரப்படவில்லை.
சுகாதார க்கேடால் அவதிப்படும் நிலை உள்ளது.மாரி, சிவகாசி.நடவடிக்கை எடுக்கப்படும்சாக்கடை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்உசிலை செல்வம், ஊராட்சி தலைவர், பள்ளபட்டி. ஆக்கிரமிக்கும் வாகனங்களால் அல்லல்விருதுநகர் மதுரை ரோடுகளில் எல்லை கயிறை தாண்டி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கந்தப்புரம் தெரு பகுதியில் நுழைவோர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.கணேசன், விருதுநகர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஆக்கிரமிக்கும் வாகனங்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும்.அர்ச்சனா, டி.எஸ்.பி., விருதுநகர்.பாதியில் நிற்கும் பணிசிவகாசி பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் தெருவில் ரோடு அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. விரைந்து முடிக்க வேண்டும்.சண்முகம், சிவகாசி.விரைவில் முடிக்கப்படும்ரோடும் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும்.கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர், சிவகாசி.