விருதுநகர் : எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் விருதுநகரில் கருமாதி மடத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயக்குமரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் மாலை அணிவித்தார்.எம்.ஜி.ஆர்.,மன்ற மாநில துணை செயலாளர் கலாநிதி முன்னிலை வகித்தார்.
மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன், நகர செயலாளர் முகமது நெய்னார், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் சேதுராமன் பங்கேற்றனர். சிவகாசி: திருத்தங்கலில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, மாபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், நகர செயலாளர் பொன்சக்திவேல், வடக்கு ஒன்றிய புதுப்பட்டி கருப்பசாமி கலந்து கொண்டனர்.*சிவகாசி விங்கபுரம் காலனியில் எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம், சாட்சியாபுரம், ரிசர்வ்லைனில் தெற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமிநாராயணன், மேற்கு ஒன்றியத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஸ்ரீவில்லிபுத்துார்: முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பஸ்டாண்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சொக்கம்பட்டி தொண்டு நிறுவன குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், ஒன்றிய செயலாளர் மயில்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயமணிமுருகன், செல்லப்பாண்டி பங்கேற்றனர். நகரின் பல்வேறு வார்டுகளிலும், வத்திராயிருப்பு, கூமாபட்டி, சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, மம்சாபுரம் பேரூராட்சி பகுதியிலும் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து கட்சியினர் வணங்கினர்.சாத்துார்: முக்குராந்தல், ஆலங்குளம், வெம்பக்கோட்டையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ஜி .சுப்பிரமணியன்,சாத்துார் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். முக்குராந்தலில் நகர செயலாளர் இளங்கோவன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் முனிஸ்வரன், தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர்.