சிவகாசி : ஆவின் , பல்வேறுஅரசுத்துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.
இந்நிலையில் திருத்தங்கலில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், மாபா பாண்டியராஜன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன் சந்தித்து பேசினர்.