சிவகாசி, ஜன. 16-பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகாசி பள்ளபட்டி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம், செங்கமலநாச்சியார்புரம், ரிசர்வ்லைன் கிராமங்களில் ஒன்றிய தி.மு.க., சார்பில் கட்ரா கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் கொடியேற்றினார். ஊராட்சி தலைவர்கள் உசிலைசெல்வம், லீலாவதிசுப்புராஜ், விருதுநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அக்னீவீர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர் கவிதாபிரவீன் கலந்து கொண்டனர்.