ஆக்சிஜன் மிஷின் வந்து 6 மாசமாச்சு... ஸ்கேன் எடுக்கவும் டாக்டர் இல்லை; காரியாபட்டி மருத்துவமனையில் பிரச்னைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
03:53


காரியாபட்டி : ஆக்சிஜன் மிஷின் வந்து 6 மாதம் ஆனது. எக்ஸ்-ரே மிஷின் பழுதாகி பல மாதங்கள் ஆகின. ஸ்கேன் மிஷின் இருக்கு, ஆனால் டாக்டர் இல்லை. காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுவதால் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



காரியாபட்டி பகுதியில் உள்ள நுாற்றுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு காரியாபட்டி அரசு மருத்துவமனையே கதி. தினமும் 500க்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். மதுரை -தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு பரிந்துரைத்து அனுப்புகின்றனர்.

எக்ஸ்-ரே மெஷின் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. அதை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்கேன் மிஷின் இருக்கிறது. அதற்கான டாக்டர் இல்லை.ஏழை மக்கள் ஸ்கேன் எடுக்க ரூ. ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. காரியாபட்டி பகுதியில் கொரோனா பரவல் அதிக அளவில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் சிரமப்பட்டனர்.

இதையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மிஷின்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்பு ஆக்சிஜன் மிஷின் இறக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. 6 பேர் பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர் ஓய்வு பெற்ற நிலையில் காலி இடமாக உள்ளது.

இதனால் பல்வேறு பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட முடியாமல் உள்ளன. ஆபத்தான நிலையில் வருபவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க அடிப்படை உபகரணங்கள் இல்லை. இப்பகுதியை பொருத்தவரை காரியாபட்டி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ஜீவ ஆதாரமாக இருந்து வருகிறது.

பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தால் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.காரியாபட்டி அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய பிரச்னைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X