தைப்பூச விழாவிற்கு அனுமதி மறுப்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
04:22

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே தைப்பூச திருவிழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் செம்புலிங்க அய்யனார், முதுகுன்றீஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, கடந்த 9ம் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழா துவங்கியது. இன்று (18ம் தேதி) தைப்பூசத் திரு விழா நடக்க இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 14ம் தேதி முதல் 18ம்தேதி வரை வழிபாட்டு தலங்களில் அரசு அனுமதி மறுத்துள்ளது.இந்த கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த முடியாததால் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம், புகார் மனு அளித்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், இந்து ஆகம விதிப்படி திருக்கோவில் பணியாளர்களைக் கொண்டு வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடத்தப்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வேல் மூழ்குதல் நடக்கும் சித்தர் ஏரி மற்றும் பொதுமக்கள் வரும் அனைத்து வழிகளையும் அடைத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என தாசில்தார் அறிவுறுத்தினார்.இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X