சேத்தியாத்தோப்பு-கோவில் வளாகத்தில் உள்ள ெஷட் கூரையில் ஏறி கழுத்தில் கத்தி வைத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் கருப்புசாமி கோவில் வளாகத்தில் உள்ள ெஷட்டில் 30 வயதுள்ள வாலிபர் ஏறி தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வாலிபரை பத்திரமாக மீட்டனர்.விசாரணையில் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுாரைச் சேர்ந்த சின்னையன் மகன் தமிழரசன், 33; என்பதும், தன்னையும், தன் தாயையும் தவறாக கிராமத்தினர் பேசுவதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து தமிழரசனை கைது செய்தனர்.