தரமற்ற நெல் விதை விற்பனை; விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு; தினமலர் செய்தி எதிரொலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
04:34


சின்னமனூர் : 'தரமற்ற விதை நெல் வினியோகத்தால் பாதித்த வயல்களில் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேளாண் இணை இயக்குனருக்கு, தேனி கலெக்டர் முரளீரதன் உத்தரவிட்டுள்ளார்.

கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரண்டாம் போக நெல் நடவு செய்து 40 நாட்களை கடந்துள்ளது. சின்னமனூரில் சாகுபடி செய்த 999 என்ற ரகம் மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அதாவது 80 நாட்களில் வெளிவர வேண்டிய கதிர்கள், நடவு செய்த 17வது நாளில் வெளிவந்துள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால் மகசூல் பாதிக்கும். தரமற்ற விதை நெல் விற்பனை செய்த கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க சின்னமனூர் விவசாயிகள் சங்கம் 15 நாட்களுக்கு முன் முதல்வருக்கு புகார் அனுப்பினர்.விவசாய சங்க நிர்வாகிகள் கூறிய தகவல் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தர வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரனுக்கு தேனி கலெக்டர் உத்தரவிட்டார்.

நேற்று வேளாண் இணை இயக்குனர், சின்னமனூர் உதவி இயக்குனர் பாண்டி பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். விவசாயிகள் சங்க தலைவர் நல்லையம்பெருமாள் உள்ளிட்டோர் பாதிப்புகளை விளக்கினர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X