புதுச்சேரி-'மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடிந்த பிறகு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அறிவிக்கப்படும்' என கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.புதுச்சேரி கடற்கரை சாலையில், புறக்காவல் நிலையம் திறப்பு விழாவில் பங்கேற்ற கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பேட்டி:பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 60 சதவீதம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதம் 40 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை.பள்ளிகளில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருவதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப் படவில்லை.மாணவர்களுக்கான தடுப்பூசி பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடியும். இப்பணி முடிந்த பிறகு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, முதல்வருடன் கலந்து பேசி கல்வித் துறை அறிவிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.