ரெட்டியார்சத்திரம் : டி.பண்ணைப்பட்டி ஊராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள சாக்கடை கழிவுநீரால் ஐந்துக்கும் மேற்பட்ட குக்கிராமத்திரனர் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணைப்பட்டி ஊராட்சியில் தெத்துப்பட்டி, ஆண்டரசன்பட்டி, டி.பண்ணைப்பட்டி, கருப்பன்சேர்வைகாரன்பட்டி, கோம்பை, குட்டிக்கரடு, வேலன்சேர்வைகாரன்பட்டி என 8 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.
இங்கு பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. வீடுகளை சூழ்ந்துள்ள சாக்கடை கழிவுநீர், அள்ளப்படாத குப்பை என சுகாதாரக்கேடான சூழலில் சிக்கி தவிக்கின்றனர். அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத வேதனையில் கிராமத்தினர் உள்ளனர்
கழிவுநீரால் அவதிஎம்.சபரீஸ்வரன், சமூக ஆர்வலர், பழனிக்கவுண்டன்புதூர்: ஜல் ஜீவன் குடிநீர் வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை. சாக்கடை கழிவுநீர் வெளியேற வசதி இல்லை. இதனால் வீடுகளை கழிவுநீர் சூழந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றி மண் மேவியுள்ளது. கழிவுநீரை கடந்து வீட்டிற்குள் நுழைய முதியோர், மகளிர், குழந்தைகள் அவதியுறுகின்றனர்.குழந்தைகளுக்கு நோய்சரவணன், ஏ.டி., காலனி: இந்த காலனியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் 20 ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதில் பிரச்னை இருக்கிறது. தெருக்களில் மட்டுமே கழிவுநீர் தேங்கிய நிலையில் தற்போது குடியிருப்புகளுக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது.
இதில் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் தொற்று நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இந்த விசயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். விரைவில் தீர்வு எட்டவில்லை எனில் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.சுகாதாரத்தில் தொய்வுநாகராஜன், விவசாயி, டி.பண்ணைப்பட்டி: குட்டிக்கரடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் வசதிகளின்றி சிரமப்படுகின்றனர். வேலன்சேர்வைகாரன்பட்டி, தெத்துப்பட்டி, ஆண்டரசன்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. கழிவுகளை எரிப்பதால் புகை மண்டலம் சூழ்ந்து குடியிருப்புவாசிகள் அவதியுறுகின்றனர். சுகாதார பணிகளில் தொய்வு தொடர்கிறது.