புதுச்சேரி-சின்ன காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் தெய்வானை. இவரது மகன் தமிழரசன் (எ) தமிழ்செல்வன்,27; மீன் வியாபாரி.நேற்று முன்தினம் இரவு, சின்ன காலாப்பட்டு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம், தமிழ்செல்வன் மீது மோதியது.கீழே விழுந்தவரின் தலையில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்செல்வனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.போக்குவரத்து வடக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.