வில்லியனுார்-வில்லியனுார் அருகே இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் தராமல் கும்பல் தப்பிச் சென்றது. துரத்தி சென்ற ஊழியரை தாக்கி, பைக்கையும் பறித்து சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார், சுல்தான்பேட்டை பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு, சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்த வினாயகம் மகன் ராஜ்குமார்(31), ஊழியராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்தனர். இரு பைக்கிற்கும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் தனது பைக்கில் அவர்களை துரத்திச் சென்றார். வில்லியனுார் மூப்பனார் காம்ப்ளக்ஸ் அருகே அவர்களை தடுத்துநிறுத்திய ராஜ்குமாரை, மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி, அவரது பைக்கையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.இது குறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.