சாலை ஆக்கிரமிப்பால் நெரிசல்கதிர்காமம் பாரதி வீதியில் ஆக்கிரமிப்பு கட்டடடங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சதிஷ், மீனாட்சிபேட்டை.இருண்டு கிடக்கும் ஏ.டி.எம்.,கோரிமேடு போலீஸ் மைதானம் அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையத்தில் மின் விளக்கு பழுதாகி இருண்டு கிடக்கிறது.மதன், ஆனந்தா நகர்.சாலையில் கட்டப்படும் கால்நடைகள்கொம்பாக்கம் ஏகவா நகர், அருணாச்சலேஸ்வர் ஓட்டல் பின்புறம் மாடுகளை சாலையில் கட்டி வைத்து, கழிவுகள் சாலையில் கொட்டி வைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.அருணாச்சலம், கொம்பாக்கம்.துர்நாற்றம் வீசும் கழிவறைகள்ஜிப்மர் மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசுகின்றன.ஜெயவேல், விழுப்புரம்.