புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வரும் 31ம் தேதி வரை அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:'குரூப்-ஏ' அலுவலர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும். 'குரூப் 'பி' மற்றும் சி' ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும்.ஊனமுற்றோர், கர்ப்பிணிகள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து, காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும்.இந்த உத்தரவுகள் வருவாய் ஈட்டும் துறைகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறைகளுக்கு பொருந்தாது.கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் அலுவலர்கள், பணியாளர்கள், கட்டுப்பாடு நீக்கும் வரை அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.