புதுச்சேரி-பாக்கமுடையான்பட்டு இ.சி.ஆரில், கிரிவ்ஸ் கம்பெனியின், மல்டி பிராண்ட் இ-பைக் விற்பனை செய்யும் நெசல் மோட்டார்ஸ் ஷோரூமை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.புதுச்சேரி இ.சி.ஆர். பாக்கமுடையான்பட்டு விவேகானந்தா பள்ளி அருகில், கிரிவ்ஸ் கம்பெனியின் மல்டி பிராண்ட் மற்றும் பல்நோக்கு பணிக்கு பயன்படுத்தும் எலக்ட்ரிக் பைக், 3 சக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நெசல் மோட்டார் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புதிய ஷோரூமை திறந்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பொறியாளர் வேணுகோபால் வரவேற்றார். கிரிவ்ஸ் நிறுவன மண்டல மேலாளர் ராஜகோபால், மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பொறியாளர் வேணுகோபால் கூறியதாவது;புதுச்சேரியில் முதல் முறையாக மல்டி பிராண்ட் கைனடிக், ஸ்நோவ் இ- ஸ்கூட்டர், ஹீரோ இ-சைக்கிள், ஒமேகா நிறுவனத்தின் பல்நோக்கு பணிக்கு பயன்படுத்தும் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு உள்ளன.எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சர்வீஸ் சென்டர், உதிரிபாகங்கள் இங்கு கிடைக்கும். தவணை முறையில் வாகனம் வாங்க விரும்புவோருக்கு வங்கி லோன் வசதியும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.கைனடிக், ஸ்நோவ் இ-ஸ்கூட்டர்களுக்கு 2 முதல் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், 70 முதல் 100 கி.மீ., துாரம் செல்லலாம். ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை தனியாக எடுத்து சார்ஜ் செய்யும் வசதி, குழந்தைகள் ஸ்கூட்டரை ஆண் செய்வதால் ஏற்படும் விபத்தை தடுக்க, பாதுகாப்பு சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ளது.டியூப்லெஸ் டயர், டிஜிட்டல் மீட்டர், டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. இ-ஸ்கூட்டர்கள் 45 கி.மீ., வேகத்தில் செல்லும்.ஒமேகா மூன்று சக்கர வாகனம், ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ., துாரம் செல்லும். மேடான பகுதியில் ஏறுவதற்காக பூஸ்டர் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு 9597442225 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார். நெசல் மோட்டார்ஸ் உரிமையாளர் அரவிந்த்ராம், அவரது சகோதரர்கள் பரத்ராம், வினோத்ராம் நன்றி கூறினர்.