பெற்றோர், பள்ளி ஆசிரியர் அனைவருக்கும் தயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
04:52


பழநி : பழநியில் கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு பள்ளிகளும், பங்கேற்பதற்கு மாணவர்களும் தயக்கம் காட்டுகின்றனர்.பழநி பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.



தற்போது தமிழக அரசின் வழிகாட்டு நெறி முறைபடி 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை. அதனால் மீண்டும் மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த தயக்கம் காட்டுகின்றனர்.மாணவர்களின் பெற்றோர் இதற்கென மொபைல் வாங்குவது, அதற்கு ரீசார்ஜ் செய்வது, போன்ற செலவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. மேலும் வீடுகளில் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

சில மாணவர்களுக்கு கண் நோய்கள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வகையில் பெற்றோர் சிரமப்படுவதாக கூறுகின்றனர்.பள்ளிகளைப் பொறுத்தவரை வேறு வகையில் தயக்கம் உள்ளது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் ஊரடங்கு காலத்திற்குப் பின் பள்ளிக் கட்டணம் செலுத்த சில மாணவர்களின் பெற்றோர் காலம் தாழ்த்தி வருகின்றனர். சிலர் கட்டணமே செலுத்தாமல் இழுத்தடிப்பது நடக்கிறது.

எனவே நிறுவனத்துக்கு போதுமான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற துவங்கினால் பெற்றோரிடம் கல்விக் கட்டணம் பெறவே முடியாமல் போகலாம். இக்காரணத்தால் பள்ளி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது.ஆசிரியர்களைப் பொறுத்தவரை தனியார் பள்ளியில் பணிபுரிவோருக்கு நேரடி வகுப்புகள் நடக்கும்போது கிடைக்கும் பணி பாதுகாப்பு ஆன்லைன் வகுப்புகள் மூலம் கிடைப்பதில்லை.

இதனால் ஆசிரியர்கள் ஒருபுறம் தயக்கம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் கொரொனா பரவலை தவிர்க்க, அரசு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்நிலையில் எல்லா தரப்பினரும் ஆன்லைன் வகுப்புக்கு தயக்கம் காட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X