எரியோடு : தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்காக சூரிய உதயம் அறக்கட்டளை, ஸாத்வீஹம் ஆன்மிக அன்னதான சேவா குழு சார்பில் எரியோட்டில் பாத சேவை, மருத்துவ, அன்னதான சேவை முகாம் நடந்தது.
தைப்பூச விழாவையொட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் எரியோடு வழியே பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். பக்தர்களில் பலருக்கு கால்வலி, சுழுக்கு, ரத்தக்கட்டு, பாதங்களில் கொப்புளம், காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.இவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சூரிய உதயம் அறக்கட்டளை, ஸாத்வீஹம் ஆன்மிக அன்னதான சேவா குழு சார்பில் பாத சேவை மருத்துவ முகாம் நடந்தது. பக்தர்களின் கால்களுக்கு மருந்து தடவி மசாஜ் செய்ததுடன், அன்னதானமும் வழங்கினர். நிறுவன தலைவர் குமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் ராஜேந்திரன், வடிவேல் பக்தர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.