கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா நடந்தது.பஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, முன்னாள் எம்.பி., காமராஜ், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இணைய தலைவர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், எம்.ஜி.ஆர்.அணி செயலாளர் தங்க பாண்டியன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, முன்னாள் நகரமன்ற சேர்மன் ரங்கன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.திண்டிவனம்அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன் தலைமையில் மேம்பாலத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில்திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் எம்.ஜி.ஆர். படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கினார்.முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கேடசன், முன்னாள் நகர செயலாளர் கணேசன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், ஏழுமலை, ரவி, நகர அவைத்தலைவர் மணிமாறன், ஜெ.,பேரவை துணைச் செயலாளர் முகமதுெஷரீப், முன்னாள் கவுன்சிலர்கள் வடபழனி, திருப்பதியார் சங்கர், செந்தில், ராஜேந்திரன், ஜனார்த்தனன், மகளிர் அணி தமிழ்ச்செல்வி, குப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.தியாகதுருகம்வடதொரசலுாரில் மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஜான்பாஷா, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கதிர்வேல், முன்னாள் கூட்டுறவு சங்க இயக்குனர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சக்திவேல், முருகன், ராஜூ, மணி, சுப்ரமணியன் பங்கேற்றனர்.மரக்காணம்திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் எம்.எல்.ஏ., சக்கரபாணி எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்தார். மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேந்தன், ஒன்றிய செயலாளர் வீரப்பன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குணசேகரன், விவசாய அணி செயலாளர் கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எழில்ராஜ், மாணவரணி துணை செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ஜெய்பீம், மாவட்ட பிரதிநிதி உமாபதி, கவுன்சிலர் கார்கில், நிர்வாகிகள் நாகம்மாள், சங்கரி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.விக்கிரவாண்டிபஸ் நிலையத்தில் நகர செயலாளர் பூர்ணராவ் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர் ., படத்திற்கு மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கினார். நகர பேரவை செயலாளர் பலராமன், மாவட்ட ஜெ., பேரவை துணைத்தலைவர் ரமேஷ், சிறுபான்மை பிரிவு ஜாகீர் உசேன், ஒன்றிய இலக்கிய அணி துரைமுருகன், நிர்வாகிகள் விஜயகுமார், சங்கர், முருகன், பிரகாஷ், அய்யனாரப்பன், தேவராஜ், வாசு, சர்புதீன், ஏழுமலை, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.