விழுப்புரம்-வடகுச்சிப்பாளையத்தில் ஞானதண்டாயுதபாணி சுவாமி பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிப்பாளையம் கிராமத்தில் ஞானதண்டாயுதபாணி சுவாமி பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு, 8ம் ஆண்டு தைப்பூச விழா இன்று நடைபெற உள்ளது.அதனையொட்டி நேற்று காலை 9:30 மணியளவில் சுவாமிக்கு சந்தனக்காப்பு மற்றும் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, தைப்பூசத்தையொட்டி இன்று காலை 6:00 மணிக்கு திருக்கயிலாயம் ஸ்ரீ பவானி ஈஸ்வரர் கோவிலில் அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து 10:30 மணிக்கு காவடி புறப்பாடு, வீதியுலா, அலகு போடுதல், தேர் வீதியுலா நடக்கிறது.மதியம் 12:00 மணியளவில் ஞானதண்டாயுதபாணிசுவாமிக்கு பாலாபிஷேகம், ஆராதனையும், 1:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.