விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி பேரூராட்சியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட ரேஷன் கடை எண்.3ல் டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கி பேரூராட்சிகுட்பட்ட 3,421 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினார்.தாசில்தார் இளவரசன், மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, கூட்டுறவு சார் பதிவாளர் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் தயாநிதி, வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ், பதிவறை எழுத்தர் சேகர், வங்கி செயலாளர் மோகன்தாஸ், எழுத்தர் சீனுவாசன், விற்பனையாளர் வசந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.