விழுப்புரம்-விழுப்புரத்தில் காய்கறி கடை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றனர்.விழுப்புரம் சுதாகர் நகர் பிரிவு, சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் பரமசிவம், 36; திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் உள்ள காய்கறி கடை மேலாளராக பணியாற்றுகிறார். இவர், கடந்த 14ம் தேதி தனது குடும்பத்தோடு வீட்டை பூட்டி கொண்டு, திருச்சி மாவட்டம், மணியம்பட்டியில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.நேற்றிரவு 7.30 மணிக்கு பரமசிவம் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. திருடு போன நகையின் மதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.