ஸ்ரீமுஷ்ணம்-ஸ்ரீமுஷ்ணம்அடுத்த நகரப்பாடி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நகரப்பாடியில் உள்ள மதுரை வீரன் கோவிலின் பூசாரி பூராசாமி, 66; நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.கோவிலில் இருந்த இரு உண்டியல்கள், சி.சி.டி.வி கேமரா பதிவு செய்யும் டி.வி.ஆர் கருவி, கோவிலின் முன்புறம் நிறுத்தியிருந்த நகரப்பாடி விஜயராகவன் என்பவரின் பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு வாகனம் உள்பட ரூ.80 ஆயிரம் ஆகும்.இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.