கடலுார்-கடலுார் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், தாழங்குடா, சாமியார்பேட்டை உட்பட முக்கிய கடற்கரை பகுதிகள், பெண்ணையாறு, கெடிலம், மணிமுத்தா, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, வல்லம்படுகை கொள்ளிடம் ஆறுகளின் கரைகளிலும் நேற்று முன்தினம் (16ம் தேதி) காணும் பொங்கல் கொண்டாட அனுமதிக்கவில்லை.மேலும், இன்று (18 ம் தேதி) ஆற்றுத் திருவிழாவுக்கும் அரசு தடை விதித்துள்ளது.ஆற்றுத் திருவிழா நாளில் தீர்த்தவாரி உற்சவத்திற்கு சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் பொது இடங்களுக்கு கொண்டு வருவதை தவிர்த்து, கோவில்களில் தீர்த்தவாரி நடத்திக் கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.