வடலுார-வடலுார் வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கடலுார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கைலாஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, ரவிச்சந்திரன், அன்பழகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் வடலுார் வள்ளலார் தெய்வ நிலைய தருமச் சாலையில் சமைக்கும் உணவை பரிசோதனை செய்தனர்.அங்கு சமைக்கும் விதம், காய்கறிகள் சுத்தமாக பயன்படுத்த படுகிறதா என ஆய்வு செய்து, அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பின்பற்றியும், கிருமிநாசினி பயன்படுத்துதல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.