பெண்ணாடம்-தை திருநாளையொட்டி, பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் இளவட்டக்கல் துாக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மணியரசன் தலைமை தாங்கினார். மகேஸ்வரி ரமேஷ் முன்னிலை வகித்தார். கிராம இளைஞர்களுக்கு வழுக்கு மரம் ஏறுதல், இளவட்ட கல் துாக்குதல், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நேற்று நடந்தது. மாலை 5:00 மணியளவில் பல்வேறு தலைப்புகளில் திருவள்ளுவர் தமிழ் மன்ற மகளிர் அமைப்பு பொது செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, தமிழ்மொழி, திருவள்ளுவர் தமிழர் மன்ற தலைவர் கார்த்திகேயன், அன்புமணி, ராமு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.சதீஷ் நன்றி கூறினார்.