நெய்வேலி-வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நெய்வேலியில் நடந்தது.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள தொ.மு.ச.,அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,முன்னிலை வகித்தார். அமைச்சர் கணேசன் நேர்காணல் நடத்தினார். நகராட்சிகளில் நடக்க உள்ள தேர்தலுக்காக திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் இருந்தும் பேரூராட்சி தேர்தலுக்காக பெண்ணாடம், மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டனர்.போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், வகிக்கும் பதவி, கட்சியில் ஆற்றிய பணிகள் , பங்கேற்ற போராட்டங்கள் குறித்தும் அமைச்சர் கணேசன் கேட்டறிந்தார். மாவட்ட துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், தணிகைச்செல்வன், ஆனந்தி சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, என்.எல்.சி.,தொ.மு.ச., தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் ஐயப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு உட்பட பலர் உடனிருந்தனர்.