கடலுார்-கொரோனா நோய் தொற்று பரவுவதால், சமூக இடைவெளி பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அவசியமில்லாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து கடை உரிமையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகளுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் வணிக நிறுவன உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தில் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடைகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.