விருத்தாசலம்-கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி புதுக் காலனியைச் சேர்ந்தவர் அரவிந்த், 30; இவரது மனைவி மாலா, 28; கடந்த 2008ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது.கடந்த 14ம் தேதி மாலா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மாலாவை தேடி வருகின்றனர்.