அண்ணா நகர் மண்டலம், 105வது வார்டில், எம்.எம்.டி.ஏ., காலனி, விநாயகபுரம் பிரதான சாலையில், சென்னை மாநகராட்சியின் சிறிய உடற்பயிற்சி திடல் உள்ளது.இங்கு, காலை மாலை வேளைகளில், ஏராளமானோர் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். மற்ற நேரங்களில் பூட்டி வைக்கப்படுகின்றன.அந்நேரங்களில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அத்துமீறி நுழைந்து துணிகளை காய வைக்கின்றனர். நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும், பந்தல் உள்ளிட்ட பொருட்களை, உடற்பயிற்சி உபகரணங்களில் கட்டி, வெயிலில் காய வைத்து வருகின்றனர்.அதேபோல், நுழைவாயலில் அத்துமீறி வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால், வாகன நிறுத்துமிடமாக மாறி வருகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.