புழல் ஊராட்சி ஒன்றியம், புள்ளிலைன் ஊராட்சியில் உள்ள, புதுநகர், சாந்தி காலனி பகுதிகளில், சாலை மற்றும் கால்வாய் வசதியின்றி, காலிமனைகளில் கழிவுநீர், குளமாக தேங்கி உள்ளது. இதனால், கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், காலிமனையில் இருந்து, சாலையில் பாயும் கழிவுநீரால், சாலைகளும் சேதமடைந்துள்ளன.மேற்கண்ட பிரச்னைகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள், கழிவுநீரை அகற்றி, சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, புள்ளிலைன் ஊராட்சி மன்றம் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால், இதுவரை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.