திருமங்கலம்-திருமங்கலம் அடுத்து பாடி குப்பம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 26. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் வீட்டின் அருகில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி நந்தகுமார், 20, சரவணன் மற்றும் அவர்களது நண்பர்களிடம் வீண் தகராறு செய்துள்ளார்.பின், அருகில் இருந்த, கட்டையால் சரவணனை தாக்கி தப்பியுள்ளார். இது குறித்து, திருமங்கலம் காவல் நிலையத்தில், சரவணன் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, பாடி குப்பம் கூவம் ஆற்றங்கரையில் பதுங்கியிருந்த, நந்தகுமாரை நேற்று அதிகாலை கைது செய்தனர்.நந்தகுமார் மீது, எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் சிறையில் இருந்து, ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.