சின்னாளபட்டி : மாநில சப் ஜூனியர் ரோல்பால் ஸ்கேட்டிங்கில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்கின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மாநில சப் ஜூனியர் ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி இன்று (ஜன.18) துவங்குகிறது. இரு நாட்கள் நடக்க உள்ள இப்போட்டிகளில் திண்டுக்கல்லை சேர்ந்த 8 பெண்கள் உள்பட 20 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நேற்று சின்னாளபட்டி ராஜன் பயிற்சி மையத்தில் இவர்களுக்கான வழியனுப்பு விழா நடந்தது. சர்வதேச ரோல்பால் ஸ்கேட்டிங் நடுவர் பிரேம்நாத் தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள், விளையாட்டு நுட்பங்கள், கையாளும் முறை குறித்து விளக்கினர்.