தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, சிட்லபாக்கத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட தெருக்களில், சில நாட்களாக மின் விளக்குகள் எரியவில்லை. தெருவிளக்குகள் இன்றி, திருட்டு அச்சம் அதிகரித்துள்ளது.மாநகராட்சியின் சிட்லபாக்கம் அலுவலகத்தில், போதிய ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், மின் விளக்கு சீரமைப்பு பணிகளில், தொய்வு ஏற்பட்டுள்ளதாக, பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி உயர் அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.