மெரினா- -மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிகுப்பம் கடற்கரை மணல் பரப்பில், நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மயிலாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், சடலமாக கிடந்தவர் நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த ஜெகதீசன், 35, என்பதும், நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில் உள்ள தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குனரகத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. ஜெகதீசன் மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக் கின்றனர்.