பிரையாம்பத்து-திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிரையாம்பத்து பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிரையாம்பத்து பகுதியில் உள்ள அரசு பள்ளியைச் சுற்றியுள்ள தெருக்களில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில், கால்வாய் முறையான பராமரிப்பில்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.மேலும், இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பகுதியில் அடிக்கடி கழிவு நீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. அருகிலேயே பேரூராட்சி அலுவலகம் இருந்தும், கழிவு நீரை அகற்ற தகுந்த நடடிக்கை எடுக்காததால் பொதுமக்களுக்கு மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் குடியிருப்பு பகுதியில் கழிவு நீரை அகற்றவும், பாதாள சாக்கடையை சீரமைக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.