திருவாலங்காடு--கனகம்மாசத்திரம் நான்கு முனை சந்திப்பில் லாரி பிரேக் டவுன் ஆனதால், வாகன ஓட்டிகள் புலம்பிய படி சென்றனர்.சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் நான்கு முனை சந்திப்பில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லோடுடன் வந்த லாரி பிரேக் டவுன் ஆகி, நடுரோட்டில் சுமார், 45 நிமிடம் நின்றது.இதனால் அதிவேகத்துடன் வந்த வாகன ஓட்டிகள் திக்கு முக்காடி சென்றனர். கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகில் இருந்தும், தடுப்போ எச்சரிக்கை பலகையோ வைக்கவில்லை என, வாகன ஓட்டிகள் புலம்பிய படி சென்றனர்.