புதுமாவிலங்கை,-புதுமாவிலங்கை ஊராட்சி செந்நெல் படியளந்த நாதர் கோவிலில், வரும் 23ல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சியில் உள்ளது குபேர ஈஸ்வரர் என்னும் பிடிஈந்த நாயகி சமேத செந்நெல் படியளந்த நாதர் கோவில். 1,600 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில், வரும் 23ம் தேதி, அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், வரும் 21ம் தேதி, காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி அன்று, மாலை 5:00 மணிக்கு கோமாதா பூஜையும், இரவு 8:00 மணிக்கு முதல் கால பூஜையும் நடைபெறும்கும்பாபிஷேக நாளான 23ம் தேதி, காலை 10:10 மணிக்கு கடம் புறப்பாடும், கலசத்தில் புனித நீர் தெளித்தலும், காலை 10:30 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.