திருப்பந்தியூர்-திருப்பந்தியூர் வேம்புலி அம்மன் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை, மஞ்சள் அபிஷேகம் நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சியில் உள்ள வேம்புலி அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.நேற்று பவுர்ணமியை முன்னிட்டு மாலை 3:00 மணிக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உட்பட பல அபிஷேகங்கள் நடந்தன.அதை தொடர்ந்து, 108 லிட்டர் மஞ்சள் அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து வேம்புலி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.