நகரி-தேசிய அளவிலான நடந்த, 40வது சப் - ஜூனியர் பால் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நகரி மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ராஜம் டவுனில் நடந்த, 40வது தேசிய அளவிலான சப்-ஜூனியர் பால்பேட்மிட்ன் சாம்பியன்ஷிப் போட்டியில், சித்துார் மாவட்டம், நகரி டவுன் சேர்ந்த சந்திரமோகன் மகன் தேஜேஷ், 14, என்பவர் பங்கேற்றார்.இவர், நகரி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீகாகுளத்தில் நடந்த இப்போட்டியில், 17 மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் தரப்பில் தேஜேஷ் பங்கேற்றார். போட்டியில், நகரியைச் சேர்ந்த தேஜேஷ் என்ற மாணவர் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.