கீழ்நல்லாத்துார்--கீழ்நல்லாத்துாரில், தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொள்ளைஅடிக்கப்பட்டு உள்ளது.கடம்பத்துார் ஒன்றியம் கீழ்நல்லாத்துார் ஊராட்சி பல்லவன் திருநகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் ராஜேஷ், 37. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் பொங்கல் விடுமுறையால் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு சென்று விட்டார்.இந்நிலையில், ராஜேஷ், நேற்று, செங்கல்பட்டில் இருந்து, வேலைக்கு சென்று விட்டார். மதியம், மனைவி ரேவதி, 30, உறவினர்கள் இருவருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை முட்டையாக கட்டிக் கொண்டிருந்தனர்.இதைப் பார்த்த, ரேவதி, அவரது தந்தை சீனிவாசன், ௬௦, ராஜேஷின் தாய் கோகிலா, ௫0, ஆகிய மூவரும் அவர்களை பிடிக்க முயன்றனர். மர்ம நபர்கள் மூவரையும் தள்ளிவிட்டு வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மூலம் தப்பியோடினர்.தகவலறிந்த ராஜேஷ் வீட்டிற்கு வந்தார். பின் ராஜேஷ் அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.