சிறப்பு பெற்ற கைலாசநாதர் கோவிலில் அடிப்படை வசதி இல்லாத அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
06:25

காஞ்சிபுரம்-கைலாசநாதர் கோவிலில் கழிப்பறை வசதி இல்லாமல், பக்தர்கள் அவதிப்படுவதால், புதிய கழிப்பறை கட்டும் பணியை விரைந்து முடிக்க, அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் கைலாசநாதர் கோவில் சிற்பங்களை காண, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் ஏராளமானோர் வருவர். அதேபோல் பிற மாவட்ட, மாநில பக்தர்களும் வருகின்றனர்.தொல்லியல் துறை பராமரிக்கும் இந்த கோவிலில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வசதிக்காக நவீன கழிப்பறை கட்ட, மத்திய அரசு அனுமதி அளித்தது.பணி துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் முடியவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாத மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும், கோவில் வளாகத்தில் நுாலகம், தேனீர் கடை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக கட்டடம் கட்டும் பணியும், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.பக்தர்கள் கூறியதாவது:காஞ்சிபுரம் நகரில் பல தொன்மையான கோவில்கள் உள்ளன. வெளியூர்களில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு, அடிப்படை தேவையான கழிப்பறை வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.கோவிலில் அதற்கான பணி துவங்கி மூன்று ஆண்டுகளாக முடியவில்லை. அதேபோல் குடிநீர் வசதியும் இல்லை. சிறப்பு பெற்ற கோவிலில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத அவல நிலையே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X