உத்திரமேரூர்-அரும்புலியூர்- - கரும்பாக்கம் இணைப்பு சாலையில், ஆங்காங்கே உள்ள ஆபத்தான வளைவுகள் குறித்து, எச்சரிக்கை பலகை அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் இருந்து, கரும்பாக்கம் செல்லும் 2 கி.மீ., துாரம் இணைப்பு சாலை உள்ளது. அரும்புலியூர், சீத்தாவரம் உள்ளிட்ட கிராம மக்கள், செங்கல்பட்டு செல்ல இந்த சாலையை பயன்படுத்திவருகின்றனர்.இச்சாலையில், அடுத்தடுத்து மூன்று இடங்களில், அபாயகராமான வளைவுகள் உள்ளன. மின்சார விளக்கு வசதி இல்லாத இச்சாலையில், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ள இச்சாலையின் வளைவு பகுதிகளில், எச்சரிக்கை பலகை, மின் விளக்குகள் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.