வாலாஜாபாத்-கருக்குப்பேட்டை - பெண்டை சாலையில், மழை நீர் கால்வாய் சேதமடைந்து இருப்பதால் 4.60 லட்சம் ரூபாய் திட்டம் வீணாகி உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, கருக்குப்பேட்டை கிராம பஸ் நிறுத்தத்தில் இருந்து, பெண்டை கிராமம் வழியாக, வில்லிவலத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை ஓரமாக 2020, நவம்பரில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 4.60 லட்சம் ரூபாய் செலவில், மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.வட கிழக்கு பருவ மழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மழை நீர் கால்வாயின் ஒரு பகுதி உடைந்துள்ளது.மழைக்காலங்களில், கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், உடைந்த பகுதி வழியாக வீணாக வயலில் செல்கிறது.வட்டார வளர்ச்சி அலுவலர் முறையாக ஆய்வு செய்து, சேதம் ஏற்பட்ட கால்வாயை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பணி மேற்பார்வையாளரை தொடர்புக்கொண்ட போது, அவர் மொபைல் போன் அழைப்பினை ஏற்கவில்லை.