வாலாஜாபாத்-பாலாற்றில் தொடர்ந்து, தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால், இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு, இடுப்பளவு நீரில் எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத், வெங்குடி கிராமத்தை ஒட்டி, பாலாறு உள்ளது. வெங்குடி கிராமத்தில், இறந்தோரின் உடலை, ஆற்றங்கரை ஓரமாக புதைப்பது வழக்கம். இதற்கு, பாலாற்றங்கரையை ஒட்டி, அரசு எரிமேடை கட்டி கொடுத்துள்ளது.பாலாற்றில், தொடர்ந்து தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால், இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு, இடுப்பளவு நீரில் இறங்கி செல்ல வேண்டி உள்ளது. சமீபத்தில், வெங்குடி கிராமத்தைச்சேர்ந்த ஒருவரின் உடலை, சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு, கிராமத்தினர் ஆற்று நீரில் இறங்கி சென்றனர்.இதை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.