தாம்பரம்--தாம்பரம் மாநகராட்சியில், 1.17 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, குறிஞ்சி நகர், வி.ஜி.என். அவென்யூவில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களுக்காக, கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், 1.17 கோடி ரூபாய் நிதியில், பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.இதற்கான, அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.அரை கிரவுண்டு பரப்பளவில் அமைய உள்ள இப்பூங்காவில், இரண்டு டென்னிஸ் அரங்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகள், எட்டு போன்ற வளைவுடைய நடைபாதை வசதி, எல்.இ.டி., மின் விளக்கு வசதி அமைக்கப்பட உள்ளன.இப்பூங்கா, கட்டுமான பணிகள் ஓரிரு நாட்களில் துவங்கி, ஓராண்டிற்குள் முடிக்கப்பட உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.